வகைப்படுத்தப்படாத

அனர்த்தப் பிரதேசங்களில் முப்படை மற்றும் நிவாரண குழுவினர்

(UDHAYAM, COLOMBO) – அனைத்து அனர்த்தப் பிரதேசங்களையும் நிவாரண குழுவினர் நெருங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சீரற்ற காலநிலையினால் நேற்று வரை நெருங்குவதற்கு கடினமாக இருந்த அனர்த்தங்களுக்கு உள்ளான இடங்களுக்கு இன்று முப்படையினர் மற்றும் நிவாரண குழுக்கள் நெருங்கியுள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு 15 இராணுவ படையணிகளைச் சேர்ந்த 1500 அதிகாரிகள், பயிற்றப்பட்ட கடற்படையைச் சேர்ந்த 86 நிவாரணக் குழுக்களில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள், 86 டிங்கி படகுகளும், விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மற்றும் விமான படை வீரர்களும் இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பாதிப்புக்கு உள்ளான பொது மக்களை காப்பாற்றும் பணியானது, மிகவும் வேகமாகவும் வினைத்திறனான முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை இராணுவத்தினரால் பாதிப்புக்கு உள்ளான 1854 பேரும், விமான படையினரால் 26 பேரும், கடற்படையினரால் 2047 பேரும் மீட்;கப்பட்டுள்ளனர்.

தற்போது நீரினால் தஞ்சம் அடைந்துள்ள நபர்களை காப்பாற்றுவதற்காக உயிர் காப்பாற்றும் அங்கிகள் 10,000 இனை பெற்றுக் கொடுப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளும் படி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதற்காக நிதியினை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளை எவ்வித தடையாகவும் எடுத்துக் கொள்ளாமல் அவசர நிலைமையொன்றாக கருதி செயற்படுமாறும் ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டள்ளது. அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்காக நட்ட ஈடு வழங்குவதற்கும், வீடுகளில் பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு உரிய நட்டஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கும், உயிரிழந்த நபர்களின் இறுதிக்கிரியைகளை அரச செலவில் மேற்கொள்வதற்கும் தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 150 மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்றாற் போல் எல்லா நேரங்களிலும் மேலதிக நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக சுகாதார தாபனமானது 150,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் நிவாரணங்கள் இரத்மலானையில் அமைந்துள்ள விமானப்படை முகாம் சூழலுக்கு வந்து அனர்த்தப் பிரதேசங்களில் முப்படை மற்றும் நிவாரண ஒப்படைக்குமாறு அனைவரிடத்திலும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனர்த்தத்திற்கு உள்ளான 07 மாவட்டங்களில் இருக்கும் அரச அதிகாரிகள் தொகை போதுமான அளவு காணப்படாவிடின், அதனை சூழவுள்ள மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சொந்த இடங்களுக்கு வெளியில் சென்று வாழும் நபர்கள் உயிரிழந்து இருப்பின், அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு உரிய மரியாதையுடன் அவ்வுடல்களுக்கு இறுதி கிரியைகளை செய்வற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

 

எல்.ஜீ. திலகரத்ன

பிரிவுத்தலைவர் – பிரச்சாரப் பிரிவு

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயககத்துக்குப் பதிலாக

Related posts

Gotabhaya returns from Singapore

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு தொடர்பில் ஜப்பானிய தொழில்நுட்ப குழு இன்று ஆய்வு

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்