(UDHAYAM, COLOMBO) – புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
நாட்டின் பல பாகங்களில் ஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் தலைப் பிறை நேற்று தென்பட்டதை அடுத்து புனித ரமழான் முதல் நோன்பு இன்று முதல் ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுவின் பிரதித் தலைவர் அப்துல் ஹமீட் பஃஜி, நேற்று அறிவித்தார்.