(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நிவாரண பொருட்கள் சேகரிப்பு நிலையமொன்று இரத்மலானை விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் போத்தல்கள், புதிய ஆடைகள், மருத்துவப் பொருட்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட பொருட்களை குறித்த நிலையத்தில் கையளிக்குமாறு பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான கேட்டுக்கொண்டுள்ளார்.