(UDHAYAM, COLOMBO) – நில்வலா கங்கையின் நீர் மட்டமானது அசாதாரணமான முறையில் உயர்வடைந்துள்ளமையினால் வெள்ள அணைகள் உடைந்து செல்லும் அபாயம் இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[accordion][acc title=”இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,”][/acc][/accordion]
நில்வலா கங்கையின் நீர் மட்டமானது அசாதாரணமான முறையில் உயர்வடைந்து, நில்வலா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெள்ள அணைகளுக்கு மேலாக நீர் பயணித்தமையினால் வெள்ள அணைகள் உடைந்து செல்லும் அவதானம் இருப்பதாக காலி மற்றும் மாத்தறை மாவட்ட நிர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் திருமதி திபிகா திரிமஹவிதான அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெள்ள நீர்மட்டமானது உயர்வடைந்துள்ளமையினால் வெள்ள அணைகளுக்கு அருகில் வாழும் நபர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்ட போதும், அவர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறாமல் வெள்ளப்பெருக்கினை பார்வையிடுவதற்காக அணைகளுக்கு மேலால் நடமாடுவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வணைகள் மண்ணினை மாத்திரம் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால், அவ்வணை உடைந்து செல்வதற்கான அவதானம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதனால் குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் நபர்கள் அனர்த்தத்துக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அதனால் அணை மீது மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து முடியுமான அளவு விலகி இருக்குமாறு அரசாங்கம் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நில்வலா கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றின் நீர் அளவீட்டு மட்டத்தினையும் மறைக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதால் வெள்ளப்பெருக்கு தொடர்பில் சரியாக குறிப்பிட முடியாத நிலையுள்ளது. கடந்த 12 மணித்தியாலங்களில் தெனியாய மற்றும் நெலுவ பிரதேசங்களில் பலத்த மழை பதியப்படாமையினால் அப்பகுதிகளில் நீர் மட்டம் குறைந்து தாழ் நிலங்களுக்கு வழிந்தோடிக் கொண்டு இருக்கின்றது. எனினும் அடுத்து வரும் மணித்தியாலங்களில் மழை பொழிந்தால் இந்நிலைமையில் மாற்றம் ஏற்படலாம். அதனால் குறித்த பகுதியை சூழ வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்தும் வசித்து வருமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது. அனர்த்த நிலை முழுமையாக நீங்கும் வரை அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மற்றும் நிவாரணமளிக்கும் சேவைகள் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் ஊடாக செயற்படுத்தப்பட உள்ளது.
கடந்த 24 மணித்தியாலயங்களில் மழை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ள போதும் வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட மக்களை மீட்பு பணிகள் மற்றும் நிவாரண சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்கும் பணிகளில் இன்றும் கடற்படை இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி வள்ளங்கள் பயன்படுத்தப்பட உள்ளதுடன் விமான படையினரின் ஹெலிகொப்பர்கள் நான்கும் இச்சேவையில் இணைந்துள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு ஏதேனும் நபரொருவர் இன்னும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பின் தேசிய இடர்முகாமைத்துவ பிரிவின் அவசர தொடர்பிலக்கமான 117 என்ற இலக்கத்திற்கு அல்லது 0112 136136 மற்றும் 0112 136222 ஆகிய இலக்கங்களின் ஊடாக அறியத்தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
கங்கைகள் ஊற்றெடுக்கும் பிரதேசங்களில் பதிவான அதிக மழைவீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது தற்போது கடலை அண்டிய பிரதேசங்களுக்கு பயணிப்பதால் களனி கங்கை, களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகிய கங்கைகளுடன் தொடர்பான கடலை அண்டிய பிரதேசங்கள் நீரினால் மூழ்கிய வண்ணம் உள்ளன. அதனால் குறித்த பிரதேசங்களை சூழ வாழும் நபர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக இடம்பெயருமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமது பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி கிடைக்காத போதும், கங்கைகளுக்கு அருகில் இருக்கும் அனைவருக்கும் குறித்த அவதானம் காணப்படுகின்றது.
நில்வலா கங்கையின் வெள்ள மட்டம் கீழ் நோக்கி பயணிப்பதால் நில்வலா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு அணைவரை கங்கையின் நீர் மட்டம் மேலெழுந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நீர்மட்டம் அதிகரித்தால் வெள்ளப்பெருக்கு அணையினை தாண்டி நீர் பயணிப்பதால் மாத்தறை நில்வலா கங்கையினை சூழவுள்ள மக்கள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படுவர். அதனால் அவர்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜின் கங்கையின் வெள்ள நீரும் கீழ் பிரதேசங்களுக்கு பயணிப்பதால் வெலிவிடிய, உனன்விடிய, மாபலகம பத்தேகம ஆகிய பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
[accordion][acc title=” ஆறுகளின் வெள்ள நீர்மட்டம்:”][/acc][/accordion]
நேற்று இரவு 9.30 மணியளவில் ஜின் கங்கையின் தவலம நீர் மதிப்பீட்டின் படி நீர் மட்டம் 37.73 அடியாக காணப்பட்டது. இரவு 12.00 மணியளவில் 35.36 அடியாக நீர் மட்டம் குறைந்துள்ளது. எனினும் ஏனைய நீர் அளவுகளின் படி 20 அடியினை தாண்டும் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
களுகங்கையின் பனாதுவ நீர் அளவீட்டின் படி நீரின் அளவு 8.85 மீட்டர்களை தாண்டி காணப்பட்டது. குறித்த கங்கையின் வெள்ளெப்பெருக்கு மட்டமானது 6.5 மீட்டர்களாகும்.
நேற்று இரவு 9.30 ஆகும் போது களனி கங்கையின் ஹங்வெல்ல நீர் அளவீட்டின் படி 9.43 மீட்டர்களாக களனி கங்கையின் நீர்மட்டம் காணப்பட்டது. அது நள்ளிரவு 12.00 மணியாகும் போது 9.42 மீட்டர்களாக சற்று குறைவடைந்திருந்தது. அதன் அதிக வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவு 10 மீட்டர்களாகும். குறைந்த வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவானது 8.0 மீட்டர்களாகும். அதனடிப்படையில் குறைந்த வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவினை தற்போது கடந்துள்ளது.
நேற்றிறவு 9.30 மணியளவில் களுகங்கையின் மில்லகந்தை நீர் அளவீட்டின் படி 12.76 மீட்டர்களாக நீர்மட்டம் காணப்பட்டது. அது நள்ளிரவு 12.00 மணியாகும் போது 12.84 மீட்டர்களாக அதிகரித்திருந்தது. அதன் வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவு 7.0 மீட்டர்களாகும்.
நேற்றிரவு 9.30 மணியளவில் களனி கங்கையின் நாகல சந்தியின் நீர் அளவீட்ட்டின் படி 4.9 மீட்டர்களாக நீர்மட்டம் காணப்பட்டது. அது நள்ளிரவாகும் போது 5.3 மீட்டர்களாக அதிகரித்திருந்தது. அதன் அதிக வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவு 7.0 மீட்டர்களாகும். குறைந்த வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தும் அளவானது 5.0 மீட்டர்களாகும்.
வளிமண்டலவியல் திணைக்கள தகவல்களின் அடிப்படையில் இன்று காலை 5.30 உடன் முடிவடையும் கடந்த 21 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. அது 68.2 மில்லிமீட்டர்களாகும். சபரகமுவ மாகாணத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் காணப்படுகின்றது. மழை வீழ்ச்சி குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ள போதும், நாட்டின் தென் மேல் பிரதேசங்களில் பருவ பெயர்ச்சி மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலை மேலும் காணபப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் பலத்த மழை பொழியக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு குறுக்காக மணித்தியாலத்துக்கு கிலோ மீட்டர் 50 – 60 வேகத்தில் ஊடறுக்கும் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் மழை பொழியும் போது காற்றின் வேகம் கூடக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு முற்படும் போது பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெற்று நிவாரணப்பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குடிநீர், உலர் உணவுகள், மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்கள், மருத்துவ வகைகள், புதிய துடைப்பாண்கள், புதிய ஆடையணிகள், செருப்பு போன்ற பொருட்களே இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு தேவையென மாவட%A