விளையாட்டு

நடுவர்களின் தீர்பை மீளாய்வு செய்யும் முறைமையில் மாற்றம்

(UDHAYAM, COLOMBO) – ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் நடுவர்களின் தீர்பை மீளாய்வு செய்யும் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் அனில் கும்லே தலைமையிலான சர்வதேச கிரிக்கட் சபையின் விசேட குழு, இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின் போட்டி ஒரு அணிக்கு நடுவரின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீளாய்வு தோல்வி அடையும் சந்தர்ப்பத்தில் அந்த வாய்ப்பு நீக்கப்படும் நிலைமை காணப்படுகிறது.

எனினும் இதனை மாற்றி, மீளாய்வு தோற்றாலும் வாய்ப்பினை அணிகள் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான திருத்த யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு சர்வதேச கிரிக்கட் சபையின் தலைமை நிறைவேற்று குழு அனுமதியளிக்கும் பட்சத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஐசிசியின் முன்னாள் நடுவர் அசாத் ரவூப் காலமானார்

சுதந்திர கிண்ண தொடரில் அசேல குணரத்னவும் இல்லை

இன்று முதல் 2022ம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகள் பர்மிங்காமில்