வகைப்படுத்தப்படாத

தொடர்ந்து அச்சுறுத்தும் காலநிலை!

(UDHAYAM, COLOMBO) – தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை  நாட்டின் ஊடாக நிலைக்கொண்டுள்ளதால் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை மற்றும் காற்று தொடர்ந்தும் நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று மாலை 4.00 மணியளவில் வௌியிட்ட செய்திக்குறிப்பில் அந்த நிலையம்  இதனை குறிப்பிட்டுள்ளது.

மேல் , சப்ரகமுவ , தென் ,மத்திய , வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மற்றைய மாகாணங்களில் ( விசேடமாக ஊவா மற்றும் கிழக்கு) சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும்.

நாட்டை சுற்றி விட்டு விட்டு வீசும் காற்று மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் – 6 பேர் பலி

வடகொரிய தலைவருடன் இரண்டாம் கட்ட சந்திப்புக்கு தயாராகும் டொனால்ட் டிரம்ப்

ගසකට යටවී මවක සහ දරුවන් දෙදෙනෙකු මරුට