வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக 91 பேர் பலி : 110 பேரை காணவில்லை!

(UDHAYAM, COLOMBO) – மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 91 பேர் பலியானதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக மாவட்டங்களின் செயலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 37 பேர் பலியானதுடன், 70 பேரை காணவில்லை என மாவட்ட செயலாளர் யு.டீ.ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரியில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 29 பேர் மரணித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மாத்தறை தெனியாய பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 4 பேர் பலியானதுடன், 16 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரதீப் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 28 பேர் பலியாகியுதுடன், 66 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts

பலத்த காற்றுடன் கூடிய மழை

දිස්ත්‍රික්ක හතකට නායයෑම් අනතුරු ඇඟවීම්

ජවිපෙ විශ්වාස භංගය අද විවාදයට