விளையாட்டு

241 ஓட்டங்களை குவித்த தென்னாபிரிக்கா…

(UTV|COLOMBO) நேற்று மாலை ஐ.சி.சி.யின் 12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே  பர்மிங்காமில் ஆரம்பமானது.

மேற்படி இப் போட்டியானது மழை காரணமாக நேரம் தாழ்த்தி ஆரம்பமானதால் ஓவர்களின் எண்ணிக்கை 49 ஆக மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்க அணிசார்பில் டீகொக் 5 ஓட்டத்துடனும், அம்லா 55 (83) ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 23 (35) ஓட்டத்துடனும், மில்லிர் 36 (37) ஓட்டத்துடனும், பெஹ்லுக்வேயோ டக்கவுட்டுடனும், வேன்டெர் டஸ்ஸன் 67 (64) ஓட்டத்துடனும் கிறிஸ் மோரிஸ் 6 (7) ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

 

 

Related posts

CWG 2022: வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி நாட்டுக்கு

இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்