உள்நாடு

24 வயதான வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – விடுதிக்கு பூட்டு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்குமிட விடுதி ஒன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதன்போது மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு, தங்குவதற்கு ஏற்றதா? என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை, அந்த தங்குமிட விடுதியை தற்காலிகமாக மூடுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் குறித்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பிரித்தானிய பெண் மற்றும் ஜெர்மன் தம்பதியினருக்கும் திடீரென வாந்தி ஏற்பட்டதால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் 24 வயதான பிரித்தானிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம், உணவு விஷமானதால் ஏற்பட்டதா? அல்லது கொலையா? என்பதை அறிய அடுத்தக்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், அதற்காக மேலும் சில வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.

இதற்காக, இறந்தவரின் உறவினர்களை அழைத்து வந்து உடலை அடையாளம் கண்ட பின்னர் பிரேத பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

பேருவளை துறைமுகத்தினை தற்காலிகமாக மூட தீர்மானம்

வவுனியா வைத்தியசாலையில் நடந்த மோசமான செயல்- ஆளுநர் அதிரடி நடவடிக்கை

பொசன் நோன்மதி தினத்தினை முன்னிட்டு 173 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு