கிசு கிசுசூடான செய்திகள் 1

24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கை-360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்கு முடக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வௌியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அது தொடர்பில் விசாரணை செய்யும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் வெளியிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த குழுவி​னரை மேற்கோள்காட்டி ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களூடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

தொழிலாளர் திணைக்களத்தில் நிதி நெருக்கடி

தேரர் ஒருவரால் காவற்துறை அதிகாரி கொலை…

மதுபானசாலைகளுக்கு பூட்டு