சூடான செய்திகள் 1

24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTVNEWS|COLOMBO) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று(08) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமிப்பு சபை தெரிவித்துள்ளது.

வத்தளை, பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா, ஜா-எல ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் ரத்துபஸ்வல, இம்புல்பே ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

களனி ஆற்றின் தெற்குக் கரை அபிவிருத்தியின் இரண்டாம் கட்ட செயற்றிட்டத்திற்காக இவ்வாறு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமிப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர்

யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!-

என்.கே. இளங்ககோன் இன்று தெரிவுக்குழுவில் ஆஜராக தேவையில்லை