Trending News

24 உலங்கு வானூர்திகளை ஜேர்மனி இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த காலங்களில் தரை மற்றும் வான் வழியாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான உலங்குவானூர்திகளையும், நோயாளர் காவு வண்டிகளையும் இலங்கைக்கு வழங்க ஜேர்மனி முன்வந்துள்ளது.

ஜேர்மனி சென்றுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, அந்நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இதற்காண இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கைக்கு 24 உலங்கு வானூர்திகள் ஜேர்மன் நிறுவனம் வழங்கவுள்ளது.

அத்துடன், நோயாளர் காவு வண்டிகளை வழங்கவும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top