சூடான செய்திகள் 1

24 மணிநேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து ஞாயிறு காலை 9.00 வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

கொழும்பு 1, 2 ,3, 4 ,7, 8 ,9, 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையிலான நீர் விநியோக பிரதான குழாய் கட்டமைப்பில் இடம்பெறவுள்ள திருத்தநடவடிக்கைகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

 

இதேவேளை கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களுக்கான நீர்விநியோகம் இந்த திருத்த வேலை காரணமாக குறைவான அழுத்தத்துடன்  காணப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது.

Related posts

நிதி அமைச்சரின் அறிவிப்பு

ஐ.தே. கட்சியில் மற்றுமொரு உறுப்பினர்

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிப்பு