(UDHAYAM, COLOMBO) – மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல்லை ( Malcolm Turnbull) சந்தித்துள்ளார்.
இதன்போது அவர்களுக்கிடையில் இருநாட்டு இராஜதந்திர உறவுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்று கென்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு ஜனாதிபதி விஜயம் செய்தார்.
இதன்போது ஜனாதிபதியை கென்பராவின் சட்டமா அதிபர் கோல்டன் ரம்சே வரவேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ஜனாதிபதி அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உணவு பொருள் பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டுள்ளார்.