(UDHAYAM, COLOMBO) – கடந்த 21 மணித்தியாலங்களில் காலி மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டில் வலுவடைவதனால் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்,கு சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
சில பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தற்காலிகமாக இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும். பொதுமக்கள் மின்னலிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.