(UDHAYAM, COLOMBO) – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
75 தினங்களைக் கடந்து இந்த போராட்டம் தொடர்கிறது.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தாங்கள் இந்த போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உறுதியான தகவல்களை வழங்கினால் விசாரணை நடத்தப்படும் என்று ஜனாதிபதி அண்மையில் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.