உள்நாடு

இதுவரையில் 75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

இன்று (29) காலை வரை 75,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி எனவும், 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட காலத்தை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த 27ஆம் திகதி காலை வரை 72,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விரைவாக விடுவிக்க உணவுப் பரிசோதகர்கள் மற்றும் தாவர தனிமைப்படுத்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சுங்கத்துறை விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அதன் மேலதிக பணிப்பாளரும், சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.

Related posts

மரணத்தின் பின்னர் PCR பரிசோதனைகள் கட்டாயமில்லை

ஏற்றுமதி வருமான சட்டம் : வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தாக்கம் இல்லை

14 வயது மாணவியை 02 பெண் பிள்ளைகளின் தந்தை பாலியல் துஷ்பிரயோகம்!