அரசியல்உள்நாடு

மூதூர் மஜீத் கிராமம் (வேதத்தீவு) கிராமத்திற்கு உதுமாலெப்பை எம்.பி திடீர் விஜயம்

மஜீத் கிராமம்(வேதத்தீவு) பிரதேச முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள், மூதூர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பைசால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மஜீத் கிராமத்திற்கு தேவையான முக்கியமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகளுடன் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தொடர்பு கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மஜீத் புற மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அம் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான விபரங்களையும் கேட்டறிந்தார்.

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கிழக்கு மாகாண சபை அமைச்சராக பதவி வகித்த போது 2012 ஆம் ஆண்டு மூதூர் மஜீத் கிராமம் (வேதத்தீவு) உருவாக்கப்பட்டு வீட்டுத்திட்டம், வீதி அபிவிருத்தி, மின்சார இணைப்பு, வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன நிர்மானங்கள் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

-கே எ ஹமீட்

Related posts

ஸாகிரா கல்லூரி A/L பெறுபேறு பிரச்சினைக்கு இந்த வாரம் தீர்வு : கல்வியமைச்சர்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குப்பதிவு

editor

2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தம் – சுசில் பிரேமஜயந்த.