அரசியல்உள்நாடு

முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித் உள்ளிட்ட பிரதேசங்கள் பலவற்றை சேர்ந்த பிரதேச அரசியல் தலைவர்கள் பலர் இன்று (27) சர்வஜன அதிகாரத்தில் இணைந்தனர்.

அக்கட்சியின் அலுவலக வளாகத்தில் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர முன்னிலையில் அவர்கள் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அந்த மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் புதல்வர் அஞ்சன திஸாநாயக்க மற்றும் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதேச அரசியல் பிரதிநிதிகள் குழுவும் இன்று சர்வஜன அதிகாரத்தில் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டனர்.

Related posts

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க ரணில் இணக்கம்- ஜீவன்

குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள நடவடிக்கைகள் திங்கள் முதல் ஆரம்பம்

கடந்த 24 மணி நேரத்தில் 325 தொற்றாளர்கள் : மூன்று மரணங்கள்