அரசியல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் உயிரிழந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் புதுடில்லியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லியிடம் அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் புதுடில்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்தில் இருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடனும் ரணில் விக்கிரமசிங்க சிறிது நேரம் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், இந்திய முன்னாள் பிரதமரின் திடீர் மறைவைத் தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எனது மின்சாரக்கட்டணம் தொடர்பில் வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை – நாமல்!

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் வௌியானது

editor

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு தாக்கல் – இரா. சாணக்கியன்

editor