(UDHAYAM, COLOMBO) – ஹிங்குராங்கொடை நகரில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் சில பகுதிகள் திடீர் என இடிந்து வீழ்ந்துள்ளதுடன் கிராம உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் ஹிங்குராங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து, பொலன்னறுவை மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த கிராம உத்தியோகஸ்தர் கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.