போதைப்பொருளை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை வௌியிட்டு பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 இல் 352 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டது.
தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், பலகைகள் இற்று போயுள்ளமை, மின் விளக்குகள் சரியாக இயங்காமை, அசுத்தமான சூழல், துர்நாற்றம், விதிமீறல் போன்றவற்றால் மூடப்பட்டுள்ளன.