உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புற நகர் பகுதியில் சனிக்கிழமை (21) நள்ளிரவு சந்தேகத்திற்கிடமாக சென்ற வேன் ஒன்றினை பின்தொடர்ந்த பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணம் செய்த 24 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த வேன் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களான மருதமுனை பகுதியை சேர்ந்த இரு சந்தேக நபர்களும் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரை இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திலிருந்து வெளியானார் ரஞ்சன் [UPDATE]

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை சபையின் பணிப்பாளராக சாய்ந்தமருது சர்ஜூன் அபுபக்கர் நியமனம்.

கப்ராலுக்கு எதிரான பயணத்தடை மேலும் நீடிப்பு