பிரேசிலின் தென்பகுதியில் தனியாருக்கு சொந்தமான விமானமொன்று விழுந்து நொருங்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலின் கிரமாடோ என்ற நகரத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தை செலுத்திய பிரேசிலின் கோடீஸ்வரர் லூயிஸ் கிளாடியோ கலியாசி அவரது மனைவி மூன்று பிள்ளைகள் உட்பட பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறிய விமானம் கட்டிடத்தின் புகைபோக்கி மீது மோதியது வீடு கடையொன்றின் மீது விழுந்து நொருங்கியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானம் விழுந்து நொருங்கியதால் வீடு கடைகளில் இருந்த 17 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த கோடீஸ்வரர் தனது குடும்பத்தினருடன் பயணித்துக்கொண்டிருந்தார் விமானத்தில் இருந்த அவரது குடும்பத்தவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
மோசமான காலநிலையிலேயே விமானம் பயணித்தது என தகவல்கள்வெளியாகியுள்ளன.