உள்நாடு

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் – மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் பல நாள் படகுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கு, மத்திய மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், கடற்பரப்பைச் சுற்றிலும் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இலங்கையின் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கி.மீ (55-60 மைல்) வரை அதிகரிக்கலாம் எனவும், அதனால் கடல் கொந்தளிப்பாகவும் சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும் எனவும் அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

UPDATE – நிலைமை மோசமாகிறது STF, கலகம் அடக்கும் படையினர் குவிப்பு : எதுக்கும் அடங்காத ஆர்ப்பாட்டக்காரர்கள்

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு

வெலிசர கடற்படை முகாமில் 60 பேருக்கு கொரோனா தொற்று