ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் இன்று (21) சனிக்கிழமை கரடியனாறு விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடை பெற்றது
நலன்புரி சங்கத்தின் தலைவரும் நகரசபையின் செயலாளருமாகிய ஜனாப் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபையில் கடமையாற்றி இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கல்வி, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளில் தேசிய மட்ட பெறுபேறுகளைப் பெற்று சாதனைகளை நிலைநாட்டிய சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் இவ்வைபவத்தில் பணப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.
இதேவேளை உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டதுடன் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
-எம்.எஸ்.எம். றசீன்