வகைப்படுத்தப்படாத

பிரித்தானியாவில் பலத்த பாதுகாப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்  அதிகரித்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

மென்செஸ்டர் நகரில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து நாட்டின் பாதுகாப்பிற்காக இராணுவத்தை ஈடுபடுத்துமாறு பாதுகாப்பு அமைச்சரிடம் பொலிசார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி பொலிஸ் ரோந்து சேவையை அதிகரிப்பதற்காக இராணுவத்தை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மென்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 50க்கு மேற்பட்டடோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தின் போது இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை. பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துடன் இலங்கை  சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகளுடன் தொடர்ந்தும் சம்பவம் தொடர்பில தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றது.

Related posts

டெங்கு தொற்றால் பதுளை மாணவன் மரணம்

Implementing death penalty in a country with political vengeance is risky

புறக்கோட்டையில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்