இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் இரண்டு வாரப் பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஓர் அரசு ஊழியர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நமது நாட்டின் சிவில் சேவைக்காக இரண்டு வார பயிற்சியைப் பெறுவதற்காக, 1,500 அரசு ஊழியர்களுக்கு இந்தியாவில் சிவில் சேவைப் பயிற்சி வகுப்பு வழங்கப்படவுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்துள்ளோம்” என்றார்.