அரசியல்உள்நாடு

“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (19) வெளியிடப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் இந்த ஜனாதிபதி செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நாட்டு மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதன் மூலம் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய பணியை தொடங்குவதே இதன் நோக்கமாகும்.

மேலும், சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைத்தன்மை மற்றும் அரசு இயந்திரங்களை வலுப்படுத்த ஒரு மாற்றும் முயற்சி தேவைப்படுவதால், அவற்றை அடைவது இதன் மற்றொரு நோக்கமாகும்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “Clean Sri Lanka” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

Related posts

அஹுங்கல்லவில் துப்பாக்கி பிரயோகம்: இருவர் காயம்

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு