அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமைகள் பாராளுமன்றுக்கு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமைகள் தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் இன்று (19) காலை பாராளுமன்ற ஹன்சாட் திணைக்களத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிவித்தலை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், சஜித் பிரேமதாசவினாலேயே இந்தச் சான்றிதழ்கள் மற்றும் ஏனையவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தக் கல்வித் தகைமைகள் அனைத்தும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இடைக்கால தடை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் சாரா ஹுல்டனுடன் அமைச்சர் காஞ்சன கலந்துரையாடல்