விளையாட்டு

சம்பியன் வெற்றிக்கிண்ணப்போட்டிக்கு பலத்த பாதுகாப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சம்பியன் வெற்றிக்கிண்ணப்போட்டி மற்றும் மகளிர் ஒரு நாள் சர்வதேச சம்பியன் வெற்றிக்கிண்ணப்போட்டி ஆகியவற்றுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இங்கிலாந்தில் மென்செஸ்டர் நகரில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியின் போது நேற்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போட்டிகளில் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிப்பாளர்களின் ஆலோசனைக்கமைவாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Related posts

டெஸ்ட் ஆட்டத்தில் மழை குறுக்கீடு

தெற்காசிய சாதனையில் உஷான் திவங்க

முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று