அரசியல்உள்நாடு

தனது கல்வித் தகைமைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் சஜித் – வீடியோ

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர் தனது முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும், தரம் 6 முதல் தரம் 9 வரை ரோயல் கல்லூரியிலும் கற்றதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர் இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில் படித்ததாகவும், 1983-1984 காலகட்டத்தில் அந்நாட்டில் பொது நிலை தேர்வில் கலந்து கொண்டு தேர்வில் 2 ஏ சித்தியும், 2 பி சித்தியும், 3 சி சித்தியும் பெற்று தேர்ச்சி பெற்றதாக கூறினார்.

Related posts

வவுனியாவில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: 36 வயதுடைய தந்தை கைது

எமக்கு கிடைக்கும் நிதியானது கல்லீரல் பராமரிப்பு நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

நாட்டை கட்டியெழுப்ப தொழில்நுட்ப புரட்சியொன்று அவசியமாகும்.