அரசியல்உள்நாடு

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் வாழ்த்து

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (17) புதிய சபாநாயகருக்கு சபையில் வாழ்த்து தெரிவித்து, உரையாற்றிய அவர் கூறியதாவது,

“புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அதேபோன்று, எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தின் சபாநாயகராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.

ஒரு குறுகிய காலத்துக்குள் இரண்டாவது சபாநாயகராக பாராளுமன்றத்தில் தெரிவாகியுள்ள நீங்கள், ஒரு வைத்தியராகவும் இருக்கின்றீர்கள்.

எனவே, சகல கட்சிகளையும், அனைத்து உறுப்பினர்களையும் சமமாக மதித்து, அனைவரினதும் உரிமைகளைப் பாதுகாத்து, நேர்மையாகச் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, உங்களை வாழ்த்தி விடைபெறுகின்றேன். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

-ஊடகப்பிரிவு

Related posts

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

விவாகரத்து தொடர்பில் புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்த அனுமதி