உள்நாடுகாலநிலை

தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது – நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்க மண்டலம் இன்று (17) காலை இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இம்மண்டலம் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையில் நகரந்து இலங்கையின் வடக்குக் கரையை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய, வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலுக்கு செல்வோருக்கு அறிவுறுத்தல் வங்காள விரிகுடா கடற்பரப்பில் மீன்பிடி உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் இந்த மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் முன்னறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

TRINCO_வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி மூதூரில் கவனயீர்ப்பு

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

தாமரை கோபுரம் நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரும்!