ஜனாதிபதி அன்பளிப்பு எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தி முற்றிலும் பொய்யென்பதுடன் அரசாங்கம் இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பில் தீர்மானம் எடுத்திருந்தால், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் கலந்துரையாடலில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த முடிவுகளை அரசாங்கம் தெரிவிப்பது செயன்முறையாக உள்ளது