-எமது செய்தியாளர்
இலங்கையில் தப்லீக் பணிகளுக்காக (பிரசாரம்) கடந்த 03ஆம் திகதி இலங்கை வந்த 08 இந்தோனேஷியர்களை நுவரெலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை இன்று (16) நுவரெலிய மாவட்ட நீதிமன்றம் வழங்கிலியிருந்து முற்றாக விடுவித்து விடுதலை செய்துள்ளது,
இது தொடர்பில் மேலும் தெரிய்வருவதாவது, 8 வெளிநாட்டவர்கள் கொண்ட குழு நுவரெலியா அல் கபீர் ஜும் ஆ பள்ளிவாசலில் தங்கி இருப்பதும் அவர்கள் 2024 நவம்பர் 29 ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் வலய அதிகார எல்லைக்குள் வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
முதலில் அவர்கள் ஹாவ எலிய மஸ்ஜித் ராசித் பள்ளிவாசலுக்கு வந்துள்ளதும் அங்கிருந்தே நுவரெலியா அல் கபீர் ஜும் ஆ பள்ளிவாசலுக்கு வந்ததாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஷாந்த குழுவினர் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்திருந்தது.
அதன்படி இந்த 8 பேரும் இந்தோனேஷியர்கள் என பொலிஸார் கண்டறிந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இவர்களுக்கு பொறுப்பாளராக நுவரெலியாவை சேர்ந்த மொஹம்மட் பளீல் தீன் என்பவர் இருந்ததாகவும், முதலில் அவரது வாக்கு மூலத்தை பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணதுங்க ஊடாக பதிவு செய்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இதன்போது இவருக்கு இந்தோனேஷிய பிரஜைகள் பயன்படுத்தும் மொழி தொடர்பில் பரந்த அறிவு காணப்படுவதாக தெரியவந்ததாக கூறும் பொலிஸார், அவரின் உதவியோடு 8 இந்தோனேஷிய பிரஜைகளின் வாக்கு மூலங்கள் பின்னர் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இதன்போது முதலில் இலங்கையில் தங்கியிருக்க அவர்களிடம் செல்லுபடியான வீசா இருக்கின்றதா என பிரதான பொலிஸ் பரிசோதகர் ரணதுங்க வினவியதாகவும் இதன்போது எவரும் செல்லுபடியான வீசாவை பொலிஸாரிடம் சமர்ப்பிக்க தவறியதாகவும், இதனை தொடர்ந்து அவர்களது கடவுச் சீட்டுக்களை கோரிய போது அவற்றையும் முன் வைக்க அவர்கள் தவறியதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்ப்பித்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கின் போது, இந்தோனேஷிய ஜமாத் ஜமாத் தரப்பினரினால் தவறுகள் அல்லது சட்டவிரோதமான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனக்கூறி அவர்களை நீதிமன்றம் விட்வித்துள்ளது