அரசியல்உள்நாடு

அமைச்சர் பிமல் ரத்நாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விஜயம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (13) காலை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தில், அமைச்சர் பிமல் இரத்நாயக்கவுடன், ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் தலைவர் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் பல்வேறு ஊழியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த கலந்துரையாடலின் போது விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்பட்டிருந்த பல வேலைத்திட்டங்கள் சட்டவிரோத கொடுக்கல், வாங்கல்கள் காரணமாக 2028 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.

Related posts

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்

சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : ரிஷாட் தரப்பு கருவுடன் சந்திப்பு [VIDEO]

இந்தியாவின் உறவுநிலை கைவிட்டுபோன இடத்தில் இருந்து தான் நாம் மீள தொடங்கப்பட வேண்டும்…..!