உள்நாடு

தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

தேசிய மக்கள் சக்தி தமதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பாதிக்கப்பட்ட பட்டதாரிகளினால் கவலை தெரிவித்தனர்.

பல கனவுகளுடனும் கஷ்டங்களுடனும் பட்டப் படிப்புகளை நிறைவுசெய்த போதிலும், இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே நிறைவேறும் நிலை காணப்படுவதாகவும் தமக்குரிய வேலைவாய்ப்புகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

நாடு திரும்பும் மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள்