உள்நாடு

இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் திரும்பிச் சென்றது – உள் விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினை

இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் ஒன்று திரும்பிச் சென்றதாக வெளியான செய்தி தொடர்பான உண்மைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.

குறித்த எரிபொருள் கொள்கலன் கப்பல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கொண்டுவரப்பட்ட கப்பல் அல்ல எனவும், எனவே அது தொடர்பில் எம்மால் தலையீட்டினை செலுத்த முடியாது எனவும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.

“யுனைட்டட் பெற்றோலிய நிறுவனம் கடந்த 2ஆம் திகதி 15,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 15,000 மெற்றிக் தொன் டீசலுடன் வந்தது. அந்த கப்பலில் உள்ளதை தரையிறக்காமல் திரும்ப சென்றதாக சொல்கிறார்கள்.

உண்மையில், இது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கொண்டுவரப்பட்ட கப்பல் அல்ல என்பதால், அது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

கடந்த காலங்களில், இலங்கையில் எரிபொருள் வர்த்தகம் செய்ய மூன்று நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது, பின்னர் அவர்கள் தனித்தனியாக எரிபொருளைக் கொண்டு வந்தனர்.

அவர்களது உள் விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த எரிபொருள் கப்பல் திரும்பிவிட்டது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை எரிபொருள் முன்பதிவுகளை மேற்கொண்டுள்ளோம்.”

Related posts

எரோல் வன பாதுகாப்பு பகுதியில் காட்டுத்தீ

கப்பலின் தீ பரவல் கட்டுக்குள் – நன்றி தெரிவித்த ஜனாதிபதி

திங்களன்று புதிய ரயில் கட்டண திருத்தம்