உள்நாடுகாலநிலை

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் இடியுடன் கூடிய மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே தமிழகக் கரையை நெருங்க வாய்ப்பு உள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணத்தில் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மில்லிமீற்றர் அளவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் மற்ற பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய எனது மக்களுக்கு நன்றி – அம்பிகா சாமுவேல்

editor

☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!

IMF உடன் செயற்பட குழு நியமனம்