உலகம்

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு நேற்று முதல்முறையாக டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு மீது கடந்த 2020 ஆம் ஆண்டு லஞ்சம், ஊழல் மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளின் பேரில் 3 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை தொடங்கியது.

இது அரசியல் காரணங்களுக்காக சொல்லப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் என அவர் அதனை மறுத்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரின் விளைவாக இந்த வழக்கு விசாரணை 2 மாதங்கள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் 2023 இல் தொடங்கியது.

நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யாவ் காலண்ட் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒக்டோபர் 8, 2023 முதல் மே 20, 2024 வரை செய்த போர் குற்றங்கள் தொடர்பாக கைது செய்ய ஆணை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை, நவம்பர் 21 அன்று வெளியிட்டது. இது, நெதன்யாகு மீதான உள்நாட்டு வழக்கு விசாரணையை மேலும் சிக்கலாக்கியது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 24 அன்று நெதன்யாகுவின் சட்டக்குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்று அவரின் விசாரணையை 15 நாட்கள் தள்ளி வைக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பின்னர், விசாரணையை மேலும் தள்ளி வைக்குமாறு 12 அமைச்சர்கள் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிரகரித்தது.

இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தில் நெதன்யாகு ஆஜரானார். அவரிடம் ரகசிய அறையில் விசாரணை நடந்தது.

பின்னர் வாரத்திற்கு 3 முறை நெதன்யாகு ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிரிமினல் குற்றங்களுங்காக தண்டனை விதிக்கப்படும் முதல் இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு இருப்பார் என்றும், அவருக்குக் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அழைப்பு

மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கிய வடகொரியா

மியன்மார் மக்களுக்கு அமெரிக்கா அடைக்கலம்