புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.
இதன்போது, புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களை கைப்பற்றியதோடு இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்தன.
முதலாவது தேசிய பட்டியல் ஆசனத்திற்கு ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தற்போது , இரண்டாவது தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.