அரசியல்உள்நாடு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பயணித்த ஜீப் வாகனத்தில் மோதி பெண் பலி

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனத்தில் மோதி யாசகப் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், பொலவத்தை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஜீப் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது பாதசாரி கடவையில் பயணித்த யாசகப் பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் 65 – 70 வயது மதிக்கத்தக்கவர் ஆவார்.

விபத்தின்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜீப் வாகனத்தில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஜீப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

SLPPவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ!

மின் கட்டணங்களை குறைக்க முடியும் – பிரதமர்

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு