அரசியல்உள்நாடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அஷ்ரப் தாஹிர் எம்.பி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை இன்று (08) நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றை நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விவசாயிகள், வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகிவரும் வீதிகளினை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

-ஊடகப் பிரிவு

Related posts

தீங்கு விளைவிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிய 454 பேர் தனிமைப்படுத்தல்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா