அரசியல்உள்நாடு

மூடப்பட்ட “சதோச” கிளைகளை மீண்டும் திறவுங்கள் – அஷ்ரப் தாஹிர் எம்.பி வேண்டுகோள்.

அம்பாரை மாவட்டத்தில் மூடப்பட்ட “சதோச” கிளைகளை மீண்டும் திறக்குமாறு வர்த்தக, உணவு கூட்டுறவு துறை அமைச்சரிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் எழுத்து மூலமான வேண்டுகோளை முன் வைத்தார்.

அர்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் முயற்சியில் நற்பிட்டிமுனை, மாளிகைகாடு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் திறந்து வைக்கப் பட்ட “சதோச” கிளைகள் மூடப்பட்டு அப்பிரதேச மக்களுக்கு அரச மாணிய விலையில் பொருட்களை பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

அத்தியாவசிய பொருட்களை இப்பிரதேச மக்களும் அரசாங்க மானிய அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அஷ்ரப் தாஹிர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கார்ப்புணர்ச்சி கொண்டு கோட்டா, ரணில் அரசாங்கத்தால் மக்கள் நலன் பாராது மூடப்பட்ட இந்த சதோச கிளைகளை மீண்டும் திறந்து மக்கள் பாவனைக்காக அவசரமாக தந்துதவுமாறும் அஷ்ரப் தாஹிர் அமைச்சரிடம் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சமூர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் திகதி அறிவிப்பு

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து நீக்கம்!

ரணிலை சந்தித்த ஹர்ஷ, கபீர் – நீண்ட நேரம் இரகசிய பேச்சு