அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் விளக்கமறியலில்

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (07) விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரை வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

லொஹான் ரத்வத்த தனது உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற ஜீப் மற்றுமொரு காருடன் மோதியதில் நேற்று (6) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் லொஹான் ரத்வத்த குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தெரியவந்துள்ளது.

அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரை பொலிசார் கைது செய்தனர்

Related posts

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரவி கருணாநாயக்க [UPDATE]

வத்தளையில் நீர் விநியோகம் தடை

ரூ.5,000 கொடுப்பனவு பெறத் தகுதியுடையோர்