முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சட்டவிரோதமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் ‘இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான பிரஜா சக்தி’ அமைப்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (04) முறைப்பாடு செய்துள்ளது.
பல அமைச்சுப் பதவிகளை வகித்த நிமல் சிறிபால டி சில்வா, அந்தக் காலப் பகுதியில் தனது மனைவி, காதலி மற்றும் நண்பர்களான ‘சிட்டிசன்’ அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி பெருமளவிலான சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாக முறைப்பாட்டில் காட்டப்பட்டுள்ளன.