அரசியல்உள்நாடு

சிலிண்டரின் பாராளுமன்றக் குழுத் தலைவராக அனுராத ஜயரத்ன எம்.பி நியமனம்

புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நியமனம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் சாய்ந்தமருதில் கைது!

கண்டி பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது