அரசியல்உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

திறைசேரியில் இருந்து அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 139,439 குடும்பங்களை சேர்ந்த 469,872 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மொத்தம் 12,348 குடும்பங்களை சேர்ந்த 38,616 பேர் 247 பாதுகாப்பான மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அனர்த்தத்தினால் மறைமுகமாக பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த அளவை விட உயர்வாக மதிப்பிடப்படுவதால், அனர்த்த நிவாரணம் மற்றும் அனர்த்தத்தின் பின்னரான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மேலும் 354 பேர் இன்றும் அடையாளம்

“அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவ ஆரம்பித்துவிட்டனர்”

“நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை”