உள்நாடு

இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சை நாளை மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27 ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அதன்படி நாளை முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் ஆன்லைன் முறையில் ரயில் டிக்கெட்டுகள்

சுற்றாடல் அமைச்சருக்கு அகழ்வாராய்ச்சி புனர்வாழ்வு அறிக்கை

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு